3 முதல் 17 வயது வரையிலானோருக்கு சீன தடுப்பூசி பாதுகாப்பானது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 29, 2021

3 முதல் 17 வயது வரையிலானோருக்கு சீன தடுப்பூசி பாதுகாப்பானது

கொரோனாவேக் தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை உலகத்துக்கு பரப்பிய சீனா 3 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. சைனோவேக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயர்.

இந்த தடுப்பூசியை 550 இளம் வயதினருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

லேசான அல்லது மிதமான பக்க விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஊசி போட்ட இடத்தில் ஏற்பட்ட வலிதான் பெரும்பாலும் பக்க விளைவாக தெரிய வந்துள்ளது. ஒரே ஒருவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மொத்தத்தில் இந்த தடுப்பூசி, 3 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு பாதுகாப்பானது, பயனுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் ‘லேன்செட்’ தொற்று நோய்கள் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment