கொரோனாவால் சிங்கம் உயிரிழப்பு : 28 யானைகளுக்கு பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

கொரோனாவால் சிங்கம் உயிரிழப்பு : 28 யானைகளுக்கு பரிசோதனை

இந்தியாவில் சென்னையிலுள்ள வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் ஒன்பது வயதான ஆசிய சிங்கம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளது. விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில், ஜூன் 3 ஆம் திகதி மாலை 9 வயதான நீலா என்ற சிங்கம் கொரோனாவால் உயிரிழந்துள்ளது.

வியாழக்கிழமை முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பெரும்பாலான சிங்கங்கள் அறிகுறியில்லாமல் இருந்துள்ளன. இதனால் அவை தனிமைப்படுத்தப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்திகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 முதல் 60 வயதுடைய 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாதிரிகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில நாட்களில் அறிக்கைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஹைதராபாத்தில் நேரு விலங்கியல் பூங்காவில் எட்டு ஆசிய சிங்கங்கள் மே 4 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad