ரஷ்யாவில் நடைபெற்ற 24ஆவது சர்வதேச பொருளாதார மாநாடு : அமைச்சர் விமல் தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு, பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

ரஷ்யாவில் நடைபெற்ற 24ஆவது சர்வதேச பொருளாதார மாநாடு : அமைச்சர் விமல் தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு, பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு

சர்வதேச பொருளாதார மாநாடு அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்றது. ஜூன் 02 முதல் 05 வரை ரஷ்யாவில் நடைபெற்ற இந்த 24 ஆவது பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (SPIEF 2021) தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த சர்வதேச பொருளாதார மாநாட்டில், சர்வதேச பொருளாதார அமைப்புகளின் தலைவர்களும், ரஷ்யா மற்றும் பிற இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உலக சுகாதார அமைப்பின் முழு வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த பொருளாதார மாநாடு, உலகப் பொருளாதாரத்தில் உருவாகி வரும் புதிய முன்னேற்றங்கள் மற்றும் தரங்களை அடையாளம் காண உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சார்பில் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச, அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் தொழில்துறை அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் அனுஷ்க குணசிங்க ஆகியோர் பங்கேற்றார்கள். 

அடுத்த பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் விசேட அதிதியாக விருந்தினராக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்படுமென்று ரஷ்ய அரசாங்க பிரதிநிதியும் அந்நாட்டு சர்வதேச விவகார மக்கள் சபை பிரதி செயலாளர் ஸ்டானிஸ்லாவ் கொரோலேவ் உறுதியளித்துள்ளார். 

இலங்கை அரசாங்க தூதுக்குழு மற்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இந்த பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் விசேட பிரதிநிதியாகும் வாய்ப்பைப் பெற்றால், இந்த மாநாட்டில் பங்கேற்கும் ரஷ்யா மற்றும் பல நாடுகளின் முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை ஈர்க்கும், இது தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீட்டிலும் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment