பெருநாள் தினங்­க­ளில் பொறுப்புடன் நடப்­போம் : ”ரமழான் கொத்தணி என பெயர் வைத்து முஸ்லிம்கள் மீது பழி சுமத்த ஒருசாரார் ஆவல் - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

பெருநாள் தினங்­க­ளில் பொறுப்புடன் நடப்­போம் : ”ரமழான் கொத்தணி என பெயர் வைத்து முஸ்லிம்கள் மீது பழி சுமத்த ஒருசாரார் ஆவல்

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் தினமும் சராசரியாக 2000 பேர் வரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் முடக்கப்படாத போதிலும் இதுவரை நூற்றுக்கும் அதிகமான கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களின் மரண வீதமும் அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இராணுவத்தினர் நாட்டின் பல பகுதிகளிலும் வைத்தியசாலை அல்லாத இடங்களில் தற்போது சிகிச்சை நிலையங்களை உருவாக்கி வருகின்றனர். 

அதி தீவிர சிகிச்­சைப் பிரிவு­களும் நோயா­­ளர்­களால் நிரம்பி வழிகின்ற நிலையில் சுகாதாரத் துறை­யினர் நெருக்­க­டி­க­ளை சந்தித்து வரு­கின்­ற­னர்.

இது­வரை நாட்டை முற்­றாக முடக்­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்கப்பட­வில்லை. மாறாக அதிக தொற்­றா­ளர்கள் இனங்காணப்படும் பகு­தி­களில் கிராம சேவையாளர் பிரி­வுகள் வாரியா­கவே தனி­மைப்­ப­டுத்தப்பட்டு வரு­கின்­றன. 

எனினும் கடந்த புத்­தாண்டு காலப்­ப­­கு­தியில் எந்த­வி­த­மான இறுக்கமான சுகா­தார வழி­காட்­டல்­க­ளுமின்றி மக்­களை சுதந்திரமான நட­மாட அனு­ம­தித்­து­விட்டு தற்­போது மக்கள் மீது குற்றம்­ சாட்­டு­­வ­து அர்த்­த­மற்­ற­தாகும். 

இந்தி­யாவில் அடுத்த அலை வேக­மாக பர­விய நிலையில் இலங்கை அர­சாங்கம் விழிப்­ப­டைந்து செயற்­பட்­டி­ருக்க வேண்டும். வைத்தியர்கள் மற்றும் சுகா­தார நிபு­ணர்­களின் அறி­வு­றுத்­தல்­களை செவி­ம­டுத்து செயற்ப­ட்­டி­ருக்க வேண்­டும்.

இலங்­கையில் இரா­ணு­வத்­தி­னரே கொவிட் தொடர்­பான விடயங்களை கையா­ளு­கின்­றனர். தீர்­மா­னங்­களும் அவர்களாலேயே எடுக்­கப்­ப­டு­கின்­றன. இது­வே இலங்­கையில் இன்னமும் கொவிட் பர­வலை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முடியா­தி­ருப்­ப­தற்குக் கார­ண­மா­கும். 

மாறாக இந்த விட­யங்­களை கையா­ளவும் தீர்­மா­னங்­களை எடுக்கவும் சுகா­தா­ரத்­ து­றை­யி­னரை சுதந்­தி­ர­மாக செயற்­பட அனுமதிக்க வேண்டும். அதன் மூலமே இலங்­கையில் ஏனைய நோய்களை வெற்­றி­க­ர­மாக கட்­டுப்­ப­டுத்­தி­யது போன்­­று கொவிட் தொற்­றி­னையும் கட்­டுப்­­ப­டுத்த முடி­யு­மா­க­வி­ருக்­கும்.

இது இவ்­வாறி­ருக்க, இம்­மு­றையும் முஸ்­லிம்கள் புனித ரம­ழான் மாதத்தை திருப்­தி­க­ர­மாக அனுஷ்­டிக்க முடி­யாத நிலை ஏற்பட்டுள்ளது. அரை­வாசி நாட்­கள் மாத்­தி­ரமே பள்­ளி­வா­சல்­களில் கூட்­டாக அமல்­களில் ஈடு­பட முடிந்­தது. தற்­போது 25 பேர் மாத்­திரம் ஒரே நேரத்தில் தனித்­த­னி­யாக தொழு­வ­தற்கு அனு­மதி வழங்கப்பட்டுள்­ளது. தரா­வீஹ் உள்­ளிட்ட ரமழான் விசேட அமல்களுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பினும் புனித நோன்புப் பெரு­நா­ளை முன்­னி­ட்டு நாட்­டின் பல பகு­தி­க­ளிலும் வியா­பாரம் களை கட்­டி­யுள்­ளது. குறிப்­பாக ஆடை விற்­பனை நிலை­யங்­களில் மக்கள் நிரம்பி வழிகின்­றனர். 

பெரும்­பா­லான வர்த்­தக நிலை­யங்­களில் சமூக இடை­வெளி பேணப்படு­வ­தில்லை என்றும் சுகா­தார வழி­மு­றைகள் பின்பற்றப்படு­வ­தில்லை என்றும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்கப்ப­டு­கின்­றன. சில பள்­ளி­வா­சல்­க­ளிலும் 25 பேர் என்ற வரை­ய­றை­களை பேணு­வ­தில்லை என விமர்­ச­­னங்கள் முன்வைக்கப்­­ப­டு­கின்­ற­­ன.

நாம் தற்­போது ரமழான் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து கொண்டி­ருக்­கிறோம். இந்நிலையில் தேவை­யற்ற வகையில் வெளியில் நட­மா­டு­வதை விடுத்து வீடு­க­ளி­லி­ருந்­த­வாறு அம­ல்­களில் ஈடு­ப­டு­வதே சிறந்­த­தாகும்.

தற்போது இலங்கையில் காணப்படும் கொவிட் 19 வைரஸ்களில் B.1.1.7 உட்பட பல்வேறு வகையான புதிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், தொற்று வழக்கத்தை விட வேகமாக பரவவும் மட்டுமன்றி கடுமையான நோய் அறிகுறிகளையும் ஏற்படுத்தவும் கூடும் என சுகா­தார மேம்பாட்டுப் பணி­யகம் அறிவித்துள்­ளது.

எனவே ஆடை கொள்­வ­ன­வுக்­கா­கவோ அல்­லது பெருநாள் கொண்டாட்­டங்­க­ளுக்­கா­கவோ நாம் அதிகம் ஒன்­று­கூ­டு­வோ­மாயின் அது­ கொவிட் பர­வ­லுக்கு மேலும் வழி­வ­­குக்கக் கூடும். பெரு­நாள் தினங்­களில் தேவை­யற்ற பய­ணங்­க­ளையும் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ள வேண்­டும். 

இது முஸ்லிம் பிர­தே­சங்­களில் புதிய கொத்­தணி ஒன்று உருவாக வழிவ­குக்­கு­­­மாயின் அதன் பிற்­பாடு முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களுக்கு முகங்­­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும். 

அதற்கு ‘ரமழான் கொத்­த­ணி’ எனப் பெயர் வைத்து முஸ்­லிம்கள் மீது பழி சுமத்­து­வ­தற்கு ஒரு­சாரார் ஆவ­லோடு காத்­தி­ருக்­கி­றார்கள். எனவேதான் இது­ விட­யத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்­­புடன் நடந்து கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.

Vidivelli

No comments:

Post a Comment