திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மாலேபே நெவில் பெர்னாண்ன்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நான்காவது கர்ப்பிணிப் பெண் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment