வெளிநாட்டு உதிரிப்பாகங்ளை பயன்படுத்தி தயாரித்த காருடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

வெளிநாட்டு உதிரிப்பாகங்ளை பயன்படுத்தி தயாரித்த காருடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது

செ.தேன்மொழி

வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட உதிரிப்பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட உதிரிப்பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த காரை சுங்க சட்ட விதிகள் உட்பட ஏனைய சட்டவிதிகளுக்கு புறம்பாக வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு -13 ஐ சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேக நபரான பெண்ணை மேலதிக விசாரணைகளுக்காக கரையோர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை குறித்த கார் தொடர்பில் எந்தவொரு ஆவணமும் சந்தேக நபரான பெண்ணிடம் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad