இந்தியாவில் சிக்கியிருக்கும் அவுஸ்திரேலிய நாட்டவர்களை அழைத்து வரத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

இந்தியாவில் சிக்கியிருக்கும் அவுஸ்திரேலிய நாட்டவர்களை அழைத்து வரத்திட்டம்

அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்தியாவில் சிக்கியிருக்கும் தனது குடிமக்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளது. அதற்கான விமானச் சேவைகள் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிமக்கள் உட்பட இந்தியாவிலிருந்து வரும் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையத் தடை விதிப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அண்மையில் கூறியிருந்தார்.

அதை மீறி இந்தியாவில் உள்ள அவுஸ்திரேலியக் குடிமக்கள் நாடு திரும்ப முற்பட்டால், அது குற்றமாகக் கருதப்படும் என்றார் அவர். 

மோரிசன் விடுத்த இந்த அறிவிப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. இதனை அடுத்து அவர் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

சுமார் 9,000 அவுஸ்திரேலியக் குடிமக்கள் இந்தியாவில் சிக்கியுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 300,000 ஐ தாண்டி பதிவாகி வருவதோடு மருத்துவமனைகளில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பவர்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கான பயணத் தடையை மே 15 ஆம் திகதி தளர்த்த எதிர்பார்ப்பதாக மொரிசன் தெரிவித்துள்ளார்.

எனினும் நிர்க்கதியாகி இருக்கும் அவுஸ்திரேலியர்கள் திரும்புவதற்காக இந்தியாவில் இருந்து வர்த்தக விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு எடுப்பதற்கு தமது அரசு அடுத்த வாரம் வரை காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment