வைரமுத்துக்கு வழங்கும் விருதுக்கு எதிர்ப்பு - ஓ.என்.வி கலாச்சார அகடமி திடீர் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

வைரமுத்துக்கு வழங்கும் விருதுக்கு எதிர்ப்பு - ஓ.என்.வி கலாச்சார அகடமி திடீர் அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகடமி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. 

இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

இதற்கு மலையாள நடிகை பார்வதி, பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு ஓ.என்.வி பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று கூறினார். மேலும் மலையாளம் சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகடமி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment