தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான கைதி சரணடைந்தார் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான கைதி சரணடைந்தார்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற கைதி சரணடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்பு கொண்டு சரணடைவதாக தெரிவித்ததன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது, சிறைச்சாலை பேரூந்திலிருந்து தப்பிச் சென்ற கைதி சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்பு கொண்டு சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் இருந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அழைத்து வந்ததுடன். அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இரவு 7 மணியளவிலேயே கைதி தப்பிச் சென்றிருந்தார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததுடன், அவர் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த கைதி போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment