அரசாங்கத்துக்கு நிதி தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை தேடிக்கொள்வது பாரிய சவாலாகும் - லலித் வீரதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

அரசாங்கத்துக்கு நிதி தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை தேடிக்கொள்வது பாரிய சவாலாகும் - லலித் வீரதுங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு நிதி தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றுவதற்கு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சவாலுக்குரியதாகும் என தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசியான அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்நோக்கியுள்ள சவால் தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அஸ்ட்ராசெனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான தடுப்பூசியை தேடிக்கொள்வது பாரியதொரு சிரமமான விடயமாகும்.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம், கொவிட் காரணமாக இந்தியா எதிர்நோக்கியுள்ள பிரச்சினையால் தடுப்பூசி விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

அத்துடன் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் இன்று இந்தியாவுக்கும் போதுமானதாக இல்லை.

உலக சுகாதார அமைப்பின் கொவெக்ஸ் நிறுவனத்துக்கும் இந்த தடுப்பூசியை தேடிக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கின்றது.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி முடியுமானளவு விரைவாக தருமாறு அரசாங்கம் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றபோதும் அவர்களுக்கு அந்த கோரிக்கையை அரசாங்கத்துக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது.

எனவே கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு நிதி தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் அதனை தேடிக்கொள்தே சவாலாக இருக்கின்றது என்றார்.

இதேவேளை, நாட்டுக்குள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கி இருப்பதாகவும் அதன் பிரகாரம் 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துவருவதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment