துறைமுக நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

துறைமுக நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க

துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ சம்பவத்தினால் துறைமுக நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று துறைமுக அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.

தற்போது துறைமுக பணிகள் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாகவும் இலங்கை வந்துள்ள விசேட குழுவினரும் மீட்பு குழுவினரும் கப்பலை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிப்புக்குள்ளான கடல் பிரதேசங்களில் மீன்பிடிக்கச் செல்ல தற்காலித் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சமுத்திரவியல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை இந்த தடை அமுலில் இருக்கும். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கடற்றொழில் நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பு களப்பு பிரதேசத்திற்கு அருகிலும் கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கொழும்புக்கு அருகில் உள்ள கடல் பிரதேசங்களில் மீன் பிடிப்பதற்காக தற்சமயம் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment