திருகோணமலையில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

திருகோணமலையில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞனுக்கு இன்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ள என்டிஜன் பரிசோதனையின் மூலம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் திருகோணமலை - தம்பலகாமம் - சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த (20 வயது) இளைஞர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவைப் பிரிவில் உள்ள தனி அறைக்குள் வைக்கப்பட்டு வயிற்று வலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இதனையடுத்து அவரை கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை உள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad