மாட்டிறைச்சியை பொதி செய்து நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்ய தீர்மானம்...! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

மாட்டிறைச்சியை பொதி செய்து நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்ய தீர்மானம்...!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான், எம்.எம்.எம்.பைசால், ஏ.எல்.எம்.அஸ்லம் மற்றும் வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது மாட்டிறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்யாமல் நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்வதற்கும், இறைச்சியை சுகாதார முறைப்படி பொதி செய்து பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புடன் கிராம சேவகர் பிரிவுக்குள் அல்லது குறித்த ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வியாபாரி மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என்றும் விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன் மக்களின் நலன் கருதி வியாபாரிகளுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே வியாபார அனுமதிப்பத்திரம் சுழற்சி முறையில் வழங்குதல் என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் சுகாதார வழிமுறைகளை பேணாத மற்றும் நிபந்தனைகளுக்குப்பால் செயற்படும் வியாபாரிகளின் விற்பனை அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment