இந்தியாவில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவும் டுபாய் மாணவர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

இந்தியாவில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவும் டுபாய் மாணவர்கள்

தற்போதுள்ள கொவிட் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தியாவில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

டுபாய் ஜுமேரா ஆங்கில மொழி பள்ளியில் (JESS) மாணவர்கள் ஒரு குழு ஒன்றுகூடி இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கான கல்வி வீடியோக்களை உள்ளடக்கிய தனித்துவமான கல்வித் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முடக்கத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் தொடர்புனை பெற்று அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குதல் மற்றும் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை 17 வயதான ஆரவ் சேத்தியா என்ற மாணவர் முன்னெடுத்திருந்தார்.

மேலும் பல்வேறு அமைப்புகளைத் தொடர்புகொண்டுள்ளதுடன் குறிப்பாக இந்திய ரோட்டரி கிளபுடன் கூட்டு சேர்ந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். 

ஏற்கனவே இந்திய கல்வி அமைச்சுடன் ரோட்டரி கிளப் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளமையினால் துபாய் மாணவர்களும் அதில் இணைந்துகொண்டுள்ளனர்.

மதிப்பீடுகளின் பிகாரம் 220 கல்வி திட்ட வீடியோக்களில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நோக்கம் கொண்ட அறிவியலுக்கான 15 வீடியோக்களை முழுமைப்படுத்தியுள்ளோம். மேலும் நுண்ணறிவுகளுக்கான விரிவான கருத்துகளுடன். அனைத்து தன்னார்வலர்களுடனும் பகிரப்பட்ட ஈடுபாட்டின் முறைகள் மற்றும் ஓடியோவின் தரம் போன்ற அளவுருக்களைக கருத்தில் கொண்டு தேவையான ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் பல பாடத்திட்டங்களை கல்வி தொகுப்புகளை தயாரித்து வருவதாக ஆரவ் சேத்தியா என்ற மாணவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்திய மாணவர்களுக்கான கல்வி ஒத்துழைப்புகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment