ஹெலியில் வந்து ‘ஆடம்பரமாக’ பொலிஸில் சரணடைந்த ஆடவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

ஹெலியில் வந்து ‘ஆடம்பரமாக’ பொலிஸில் சரணடைந்த ஆடவர்

நியூஸிலாந்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஓர் ஆடவர் வாடகை ஹெலிகொப்டரில் பறந்து சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஜேம்ஸ் பிரையன்ட் என்னும் அந்த நபர் ஆயுதம் கொண்டு தாக்கியது, வேண்டுமென்றே காயப்படுத்தியது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அவர், வட ஒட்டாகோ என்னும் சிறிய ஊரில் 5 வாரங்கள் ஒளிந்திருந்ததாக பி.பி.சி செய்தி நிறுவனம் கூறியது. அங்கு செலவிட்ட நேரம் சிறப்பாக இருந்தாலும் அங்கிருந்து கிளம்ப தான் தயார் என பிரையன்ட் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஒட்டாகோவில் இருந்தபோது யோகா பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரையன்ட் ஆபத்தானவர் என்றும் அவரை அணுக வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்திருந்தனர்.

‘பொதுமக்களுக்கு ஆபத்தான நபர்’ என பொலிஸார் தம்மை வகைப்படுத்தியதை எண்ணி வருந்தியதால், பிரையன்ட் சரணடைந்ததாக கூறப்பட்டது.

பொலிஸாரிடம் ஆடம்பரமாக சரணடைய வேண்டும் என்பதால், ஹெலிகொப்டரில் வந்ததாக அவர் தெரிவித்தார். வரும் வழியில் விலையுயர்ந்த உணவு வகைகளை அவர் உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment