கொரோனா நோயாளி தப்பியோட்டம்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர், மொஹமட் றிகாஸ் எனும் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (25) மாலையளவில் குறித்த நபர் இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசியின் ஊடாக அறிவிக்கவும். 071 859 1579 - கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad