ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மாவட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் - அரசாங்க தகவல் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 25, 2021

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மாவட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் - அரசாங்க தகவல் திணைக்களம்

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் மாவட்ட ரீதியாக நடைமுறைப்படுத்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சும் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரையிலும், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய ஊடகவியலாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஏராளமான ஊடகவியலாளர்கள் தற்பொழுது கொவிட் வைரஸால் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்பாகவும், அவர்களுக்காக ஒரு தனிமைப்படுத்தல் மையத்தை நிறுவுவது குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்துரையாடி, இதற்காக ஒரு சிறப்பு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment