அறிவுரைகள் எல்லாம் சரிதான் கடைபிடிக்கின்றோம், முதலில் தடுப்பூசிகளை கொண்டு வாருங்கள் - மனோ கணேசன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

அறிவுரைகள் எல்லாம் சரிதான் கடைபிடிக்கின்றோம், முதலில் தடுப்பூசிகளை கொண்டு வாருங்கள் - மனோ கணேசன்

"பயணக்கட்டுப்பாட்டை மதியுங்கள்", "வீடுகளிலேயே இருங்கள்", என்ற அறிவுரைகள் எல்லாம் சரிதான். கடைபிடிக்கின்றோம். ஆனால் முதல் வேலையாக, தடுப்பூசிகளை கொண்டு வாருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, "என்ன விலை கொடுத்தும். வாங்க தயார்", "கறுப்பு சந்தையிலும் வாங்க தயார்", என்றெல்லாம் அறிக்கை விடுவதால் பயனில்லை.

வாங்க வேண்டிய வேளையில் வாங்கவும், "ஓடர்" கொடுக்கவும் தவறி விட்டீர்கள். இனியாவது உங்கள் தலைகளை கொடுத்தாவது, அப்பாவி மக்களுக்கு தடுப்பூசி தருவியுங்கள்.

முதற்கட்டமாக, "அஸ்ட்ராசெனீகா" ஏற்றிய, ஆறு இலட்சம் பேருக்கு, அதே "அஸ்ட்ராசெனீகா" இரண்டாம் கட்ட ஊசியையாவது கொண்டு வாருங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad