கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் ஐம்பத்தியெட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், கொரோனா தொற்றாளர் இணங்காணப்பட்ட வீதியில் வசிப்பவர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் உட்பட ஐம்பத்தியெட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் இருபத்தியெழு (27) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவ மாது, அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸாரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad