ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை 07 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை 07 பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

வியாபார நிமித்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளோர், கொரோனா தொற்றாளர்களுடன் முதல் தொடர்புடைய உறவினர்கள் என 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலும் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad