தோப்பூர் பிரதேச பாடசாலைகள் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வியை மக்கள் முன்வைக்கின்றனர் - இம்ரான் மஹ்ரூப் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

தோப்பூர் பிரதேச பாடசாலைகள் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வியை மக்கள் முன்வைக்கின்றனர் - இம்ரான் மஹ்ரூப்

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தில் திருகோணமலை மாவட்ட பல பாடசாலைகள் உள்வாங்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தும் இந்த பட்டியலில் தோப்பூர் பிரதேச பாடசாலைகள் எதுவும் உள்வாங்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வியை அப்பிரதேச மக்கள் முன்வைக்கின்றனர் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இக்கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது காரணம் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த சகல தகுதிகளும் கொண்ட கடந்த காலங்களில் சிறந்த பெறுபேற்றை வெளிக்காட்டிய அல்ஹம்ரா மத்திய கல்லூரி மற்றும் தோப்பூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் இப்பிரதேசத்தில் உள்ளன. இதில் ஒரு பாடசாலையை இத்திட்டத்தில் உள்வாங்கி இருக்கலாம்.

தோப்புருடன் சேர்த்து சீனக்குடா நாலந்தா மகா வித்தியாலயம், குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலயம், வெள்ளைமணல் அல்-அஸ்கர் மகா வித்தியாலயம், மூதூர் சேனையூர் மகா வித்தியாலயம், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளேன். விரைவில் இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad