மொரகஹஹேன, இறக்குவானை ஆகிய பகுதிகளில் திடீர் தீப்பரவல் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

மொரகஹஹேன, இறக்குவானை ஆகிய பகுதிகளில் திடீர் தீப்பரவல்

(செ.தேன்மொழி)

மொரகஹஹேன, இறக்குவானை ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவத்துடுவ பகுதியில் இருமாடி கட்டிடத்தில் இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண மற்றும் களுத்துறை பகுதிகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினரின் உதவிகளுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த தீப்பரவல் காரணமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. எனினும் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரி - இறக்குவானை பகுதியில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்ததுடன், இதன்போது விரைந்து செயற்பட்ட இறக்குவானை பொலிஸார் இரத்தினபுரி தீயணைப்பு படையின் உதவியுடன் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக பரிசு பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. இதேவேளை இந்த தீப்பரவல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad