"நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையானுக்கும் பிரேமளால் ஜெயசேகர விற்கும் ஒரு சட்டம் ரிஷாட் பதியுதீனுக்கு இன்னும் ஒரு சட்டமா" ஒரே நாடு ஒரே சட்டம் இதுதானா என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எந்த வித அடிப்படையும் அற்ற விதத்தில் நிகழ்ந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயுதீனின் கைது எமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (06) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
முன்னாள் அமைச்சர் ரிஷாதின் கைது நடந்த விதம் இந்த கைது தொடர்பான நகர்வுகள், எல்லாமே மேலும் சில சந்தேகங்களைத்தான் எங்களுக்குள் வலுப்படுத்தி இருக்கின்றது.
நீதியான முறையிலே இந்த கைது இடம்பெற்றிருந்தால் அல்லது இந்த கைதிணை அடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகப் பேச்சாளர் முதல் பாதுகாப்பு அமைச்சர் வரை சொன்ன கருத்துக்களை பார்க்கும்போது, பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது விஞ்சானப்பூர்வமான சில ஆதரங்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது என்று சொன்னதற்கு அமைவாக ஏதேனும் நிகழ்த்திருந்தால் நாம் சிந்தித்திருக்கமுடியும். ஆனால் ஒன்றுமே இல்லாது அடிப்படையே இல்லாத ஒரு நிலையில்தான் இந்த கைது இடம்பெற்றிருக்கின்றது.
இந்த கைது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு கைது அதிலும் நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால் ஒரு பாராளுமன்ற உறிப்பினராக ஒருவருக்கு இருக்கின்ற சிறப்பு உரிமையின் அடிப்படையிலே ஒருவர் பாராளுமன்றதிற்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றதன. அந்த அடிப்படையில் எமது தலைவரின் பாராளுமன்ற வருகை என்பது நேற்று 05 மற்றும் நேற்றையமுன்தினம் என இரு தினங்களும் மறுக்கப்பட்ட வேளையிலே பல்வேறு குழப்பங்கள் இருந்ததை எம்மால் பார்க்க முடிந்தது. பாராளுமன்றத்தில் அவர் வருவதற்கான அனுமதி சபாநாயகரினால் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்ததனால் அதற்கான குழுத்தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த தினத்தில் அவர் அழைத்து வரப்படவில்லை. அது தொடர்பாக கேட்கப்பட்டபோது இரண்டு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டது. நாங்கள் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வினவியபோது, கேட்டறிந்து சொல்வதாக தெரிவித்திருந்தார்கள். பின்னர் சட்டச்சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சட்டமா அதிபரோ, பாராளுமன்றத்துக்கு தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வருவதில் எந்தவொரு சட்டச்சிக்களும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்திருந்தார்.
அதற்கு பிறகு இது தொடர்பாக நாங்கள் சார்ஜெண்ட் ஒப் ஆம்ஸ் அவர்களை சந்தித்து இது விடயம் தொடர்பாக நான் வினவியபோது அங்கே சிறைச்சாலையில் பணியாற்றிய ஒருவரின் மனைவிக்கு கோரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக கோரோனா பரவல் இருப்பதால் கொண்டுவர முடியாது என்று முன்னுக்கு பின் முரணான மூன்று காரணங்கள் சொல்லப்பட்டன.
இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களை பாராளுமன்றதிற்கு கொண்டுவரக்கூடாது என்பதான ஒரு கோரிக்கையை அங்கே பாரளுமன்றத்தில் முன்வைத்தார்.
அவ்வாறான ஒரு கோரிக்கையை முன் வைப்பது என்பது எந்த ஒரு சட்ட வரையறைக்கு உட்பட்ட கோரிக்கை என்பதுதான் இங்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இருக்கின்ற சிறப்பு உரிமையை மீறி அவரை அழைத்து வரக்கூடாது என்றவாறு உரிய அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஒரு அமைச்சராகவோ பாரளுமன்றதிற்குள் அவ்வாறான ஒரு கோரிக்கையை அவர் விடுக்க முடியாது. அதனை மீறி அவர் எவ்வாறு அந்த கோரிக்கையை விடுக்க முடியும்.
எனவே அப்படியான ஒரு கோரிக்கையை அவர் விடுக்கிறார் என்றால் இந்த பாராளுமன்றதிற்கு அவர் அழைத்து வரப்படாததில் இருந்து அல்லது அவர் கைது செய்யப்பட்டத்தில் இருந்து வேறு சில நோக்கங்கள் இருக்கின்றது என நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.
குறிப்பாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற தகவல் இந்த அரசாங்கத்தில் சொல்லப்பட்டது, குறித்த ஒரே நாடு ஒரே சட்டம் என்பது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை நாம் பார்க்கின்றபோது எங்களின் கட்சித் தலைவர் அவர்களின் கைதை நாங்கள் இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ள முடியும்.
கடந்த முறையும் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்த பாராளுமன்றதிற்கு அவர் அழைத்து வரப்பட்ட விதம், அவரை கொண்டுவருவதில் இருந்த சிக்கல்கள், அதே சமயத்தில் பாராளுமன்றத்திலே கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அவர்கள் வருகை தந்துகொண்டிருந்தார், மேலும் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவராக இருந்தார். அதே சமயத்தில் பிரேமலல் ஜெயஸாக்கர என்று சொல்லப்படுகின்ற ஒருவரும் கூட குற்றவாளியாக நீதி மன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு மேன்முறைஈடு செய்யப்பட்ட வேளையில் அவர் அழைத்து வரப்பட்டார் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்ட விதம் இந்த கோரோணா சூழ்நிலையில் அவர்களுக்கு எத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதேசமயத்தில் ரிஷாட் பதியுதீனை கொண்டு வருவதில் எத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன என்பதை பார்த்தாலே எமக்கு தெளிவாக புரியும் ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற அந்த சுலோகம் அங்கே தவிடுபொடியானது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment