தேங்காய் எண்ணெயில் கலப்படத்திற்கு அனுமதியில்லை - வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

தேங்காய் எண்ணெயில் கலப்படத்திற்கு அனுமதியில்லை - வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தரவு

உணவிற்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில், வேறு எந்தவொரு எண்ணெயையும் கலப்படம் செய்வதை தடை செய்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில், குறித்த தடை உத்தரவு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, போத்தல்களில், பொதிகளில், கொள்கலனில் அடைக்கப்பட்டு, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்யப்படும் உணவுக்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில், ஏனைய எந்தவொரு எண்ணைய் வகைகளையோ, அதன் சேர்க்கையையே சேர்க்கப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயில், அளவுக்கு அதிகமான புற்றுநோய் காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment