அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ்

அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்த போதே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்பி வட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்பை வழங்குமாறும் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மேற்படி விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொளண்டு தருவதாக அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad