இலங்கையில் இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்தது - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

இலங்கையில் இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்தது

இலங்கையில் கொவிட்-19 க்கு எதிராக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்சமயம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 117,571 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் இரண்டாவது டோஸ் 23,135 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனவரி 29 ஆம் திகதிதேசிய கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியது, 925,242 பேர் கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை பெற்றனர்.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் திட்டம் ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கையில் 2,435 சீன நாட்டினருக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment