பயணத்தடை அமுலிலுள்ள போது யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

பயணத்தடை அமுலிலுள்ள போது யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது.

அதில் கையில் காயமடைந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு அபாய குரல் எழுப்பியவாறு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad