தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய கொத்மலை ரம்பொடையில் அமைந்துள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் இடைநிலை கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளரும், மலையகத்திற்கு பொறுப்பான கொவிட் பாதுகாப்பு செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் இதன்போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இராணுவத்தினர் தற்போது 275 படுக்கைகள் கொண்ட வசதி மையத்தை நிர்மாணித்துள்ளனர்.

அத்தோடு, வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலைமையை பார்வையிடுவதற்காக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாரத் அருள்சாமி ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு, நிலைமையையும் ஆராய்ந்துக் கொண்டனர். இதன்போது, இராணுவ அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மேலும், எதிர்வரும் 29 ஆம் திகதி இந்த மையம் சுகாதார பிரிவினருக்கு கையளிக்கப்படும் என பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment