செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால், ஏழு பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஜாவா போலீஸ் உயர் அதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

எப்படியாயினும், செல்பி மோகத்தால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment