ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன் ராமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன் ராமநாயக்க

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதித்துறை அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை அனுபவித்து வருகிறார்.

No comments:

Post a Comment