20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்புடன் இந்த மையங்கள் மாற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதிகளில் கொரோனா மையங்கள் உருவாக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருந்தபோது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு இருந்தன.
தற்போது நிலைமை கடந்த ஆண்டை விட மோசமாக இருப்பதால் மீண்டும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படுக்கைகள் அமைத்து பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட 10 கல்லூரிகள் கொரோனா மையமாக செயல்படுகிறது.
இது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.
20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்புடன் இந்த மையங்கள் மாற்றப்பட்டு வருகிறது.
இங்கு அடிப்படையான வசதிகள் செய்யப்படுகிறது. சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 5 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’’ என்றனர்.
No comments:
Post a Comment