ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அரியானா மாநிலத்தின் குருகிராம் பொலிஸாருக்கு கொவிட்-19 உதவிக்காக ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தவான் நன்கொடை அளித்த ஒக்ஸிஜன் செறிவூட்டிகளின் படத்தை குருகிராம் பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதில் அளித்த ஷிகர் தவான், “தற்போதுள்ள கடினமானச் சூழ்நிலையில் இது போன்ற சிறு உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என் நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா எழுச்சி பெற்று ஜொலிக்கும்” என்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment