ஒன்பது மாத கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி : ஐ.தே.க.வின் ஒரேயொரு ஆசனம் ரணிலுக்கு - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

ஒன்பது மாத கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி : ஐ.தே.க.வின் ஒரேயொரு ஆசனம் ரணிலுக்கு

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு, அக்கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கான நியமனம் தொடர்பில், சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி தற்போது தீர்மானமொன்றுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad