தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களைவிட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக்கூடும்; அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து சகலரும் பொறுப்புடன் செயற்படுங்கள் - அமைச்சர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களைவிட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக்கூடும்; அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து சகலரும் பொறுப்புடன் செயற்படுங்கள் - அமைச்சர் சுதர்ஷனி

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களைவிட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக்கூடும். எனவே அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து, சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக்கடினமாகும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பெருமளவான தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகமானோர் சமூகத்தில் இருக்கக்கூடும்.

எனவே பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து அதன் முடிவுகள் வெளியிடப்படும் வரை பரிசோதனை செய்து கொள்பவர்களை வெளியிடங்களுக்குச் செல்லாது, வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாளொன்றில் அதிகளவான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதன் முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து, சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக்கடினமாகும். 

அத்தோடு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்கள் அனைத்தும் கொவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால், வெளிநாடுகளிலிருந்து பெருமளவானோர் அழைத்து வரப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். எனவேதான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் உள்நாட்டில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment