ஐஸ் போதைப் பொருள் கடத்திய வியாபாரி ஏறாவூர் பொலிஸாரினால் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

ஐஸ் போதைப் பொருள் கடத்திய வியாபாரி ஏறாவூர் பொலிஸாரினால் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

பாதணியில் மறைத்து ஐஸ் போதைப் பொருள் கடத்திய வியாபாரி ஒருவர் இன்று வியாழக்கிழமை ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரியிடமிருந்து போதைப் பொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கட்டுப்பாடு அமுல் செய்யப்பட்டிருந்த வேளையில் இவர் காத்தான்குடி பகுதியிலிருந்து வாழைச்சேனை நோக்கி கற்பிணியான தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் கடமையிலிருந்த பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது மிக நுட்பமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப் பொருள் பைக்கற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

37 வயதுடைய ஐஸ் போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

சந்தேக நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad