கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசு தீர்மானம் - நாளை சுற்றுநிருபம் வெளியிட முடிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசு தீர்மானம் - நாளை சுற்றுநிருபம் வெளியிட முடிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து அரசாங்க நிறுனங்களிலும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலையில் கொவிட்-19 தொற்றுக்கு அதிகளவிலான கர்ப்பிணிப் பெண்கள் இலக்காகி வருவதால், தொற்றின் வீரியமும் அதிகம் என்பதனாலும் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி நடாத்துவது தொடர்பின் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துடன் இணைந்தவாறான மற்றுமொரு சுற்றுநிருபத்தை நாளை வெளியிட முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரசாங்க அலுவலகங்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான அதிகாரத்தை, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கும் சுற்றுநிருபமொன்று அண்மையில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருநதமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment