சொத்து விவகாரத்தில் மகனால் பறிபோன தந்தையின் உயிர் : வெயங்கொடையில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

சொத்து விவகாரத்தில் மகனால் பறிபோன தந்தையின் உயிர் : வெயங்கொடையில் சம்பவம்

(செ.தேன்மொழி)

வெயங்கொடை பகுதியில் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மகனால் தள்ளிவிடப்பட்ட தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனது சகோதரனால் தள்ளிவிடப்பட்டதால் தந்தை உயிரிழந்துள்ளதாக, வெயங்கொடை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சகோதரரான 32 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் வேயங்கொட பகுதியை சேர்ந்த 67 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சந்தேகநபரான மகன் கடந்த சனிக்கிழமை தனது சகோதரிக்கு எவ்வித சொத்துக்களையும் எழுத்து மூலமாக பொறுப்பளிக்க வேண்டாம் என அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட பிரச்சினையின்போது மகன் அவரது தந்தையை தள்ளிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த சந்தேகநபரின் தந்தை சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad