கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 6, 2021

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே நாளில் புதிதாக நிறைய பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதுபோல், நிறைய பேர் கொரோனாவால் பலர் உயிர் இழந்து வருகிறார்கள்.

இந்த தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல ஹிந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47.

இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மும்பையில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன் பனாரஸ் சென்றுள்ளார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டார். அவருக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (6) உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad