இலங்கையில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

இலங்கையில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment