வெளிநாடுகள் வழங்கி வரும் மருத்துவ உதவிகள் மக்களுக்கு பயன்பட வேண்டும், அதை பெட்டி கட்டி குப்பையாக சேர்த்து வைத்திவிடக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா 2ஆவது அலை கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்து வருகின்றனர். இந்த சங்கடமான நேரத்தில் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு உதவிகள் செய்து வருகின்றன.
ஒக்சிஜன் சிலிண்டர்கள், டேங்கர்கள், ஒக்சிஜன் செறிவூட்டிகள், ஒக்சிஜன் தயாரிக்கும் நடமாடும் மையம், மருந்துகள் அனுப்பியுள்ளது.
இருந்தாலும் டெல்லியில் இன்னும் ஒக்சிஜன் தட்டுப்பாடு குறையவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த விசயத்தில் நீதிமன்றம் அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு மத்திய அரசு சூழ்நிலையை விரைந்து சமாளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்துள்ள 260 ஒக்சிஜன் செறிவூட்டிகள் லேடி ஹார்டிங் மெடிக்கல் காலேஜ் பெற்றுக் கொண்டது. ஆனால், அதற்கு அவ்வளவு தேவை இல்லை என்று நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து ‘‘வெளிநாடுகள் அனுப்பிய மருத்துவம் சார்ந்த உதவிகள் மக்களுக்காக என்பதை மறந்து விடக்கூடாது. அது அவர்களுக்கு சென்றடைய வேண்டும். இன்ஸ்டிடியூட்டிற்கு அதிக அளவில் தேவைப்படாத போது, அவர்கள் வைத்திருக்கும் பொக்ஸ்களை எந்தவித நோக்கமின்றி உடனடியாக வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment