தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்! - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்!

மு.க. ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து வளமான மாநிலமாக மாற்ற மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தி.மு.க 6வது முறையாக ஆட்சி அமைக்கும், நிலையில் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக இருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோயக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad