ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி, 12 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி, 12 பேர் காயம்

ரஷ்ய நகரமான கசானில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவின் கிழக்கே 820 கி.மீ (510 மைல்) தொலைவில் நடந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இரு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அவர்களில் 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 9 பேர் உயிரிழந்தாகவும், மேலும் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கசானின் அவசர சேவைப் பிரிவுகள் ஸ்பூட்னிக் செய்தி நிறுவனத்தினடம் உறுதிப்படுத்தியுள்ளன.

20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக டாடர்ஸ்தானின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment