69 பேருக்கு கொரோனா - மூடப்பட ஆடைத் தொழிற்சாலை! - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

69 பேருக்கு கொரோனா - மூடப்பட ஆடைத் தொழிற்சாலை!

69 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கொத்மலை பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலையில் நுவரெலியா, கொத்மலை, புஸல்லாவை, ராவணாகொட மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தொழில் புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment