பயம், அச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது, அதற்கு பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

பயம், அச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது, அதற்கு பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்

(இராஜதுரை ஹஷான்)

பயம், அச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது, அதற்கு பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் பிரதான விடயமாக போதைப் பொருளை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்காக, போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்தல் போன்ற காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, போதைப் பொருளை கொண்டு வருதல் மற்றும் அதற்கான கேள்வியை குறைப்பதற்காக தற்போது தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைக்காமல் புனர்வாழ்வு அளித்து தொழிற் பயிற்சிகளை வழங்கி சமூகத்துக்கு பயனுள்ள பிரஜையாக இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறு போதைக்கு அடிமையாகி சிறைக்குச் செல்பவர்கள், விடுதலையாகி வெளியே வந்ததும் மோசமான குற்றவாளியாக மாறுவதும், தற்போது 40 சதவீத குற்றங்கள், குற்றவாளிகள் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படுவதாகவும் நாட்டின் தொழிலாளர் சக்திக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை இழக்கிறார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் பல எதிர்பார்த்த திட்டங்கள் தொடர்பான காரணங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதில் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள், சமூக மயப்படுத்தப்பட வேண்டியவர்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவுகளின் கீழ், இத்திட்டத்தை செயற்படுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இத்திட்டத்துக்காக நிறைவேற்று மற்றும் முகாமையாளர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய அமைச்சு, திணைக்களம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment