நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதோடு, மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் டுனெடின் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் பிற்பகல் வேளையில் இந்த குத்தல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளதாவது, தாக்குதலின் பின்னணியில் உள்ள உந்துதல் தெரியவில்லை, ஆனால் இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத நிகழ்வு என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த கட்டத்தில், இது ஒரு உள்நாட்டு பயங்கரவாத நிகழ்வு என்று அவர்கள் வரையறுப்பார்கள் என காவல்துறையின் பார்வையில் இருந்து எதுவும் கூற முடியாது," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெகுஜன வன்முறை சம்பவங்கள் நியூசிலாந்தில் அரிதானவை, ஆனால் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மசூதிகளில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பேரட் உயிரிழந்தார்கள்.
காயமடைந்த நான்கு பேரும் பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment