தொடர்ந்தும் முதலிடத்தில் கல்முனை ஸாஹிரா - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

தொடர்ந்தும் முதலிடத்தில் கல்முனை ஸாஹிரா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இம்முறை (2020) நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து 79 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதி பெற்றுள்ளதாத கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தில் இருந்து 65 பேரும், பழைய பாடத்திட்டத்தில் இருந்து 14 பேரும் என 79 மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவதற்க்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு (2019, 2020) ஆண்டுகளாக உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டு வருவதாகவும், உயர்தரத்தில் 3 பிரிவுகளிலும் உள்ள 6 பாடத்துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்குள் இப்பாடசாலை அதிகம் இடம்பிடித்திருப்பது இக்கல்லூரியின் மற்றுமொரு சாதனையாகும் என அதிபர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மற்றும் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், உதவி பகுதித்தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட பாடசாலையின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment