நிந்தவூர் அல் - அஷ்ரகில் இருந்து 55 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

நிந்தவூர் அல் - அஷ்ரகில் இருந்து 55 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இம்முறை (2020) நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நிந்தவூர் கமு/அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 55 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதி பெற்றுள்ளதாத கல்லூரியின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.

பாடசாலையில் இருந்து Bio Systems Tecnology பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி முதல் முயற்சியில் மாணவரொருவர் மாவட்ட மட்டத்தில் முதலாலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

அத்தோடு, வைத்தியத்துறைக்கு முதலாவது முயற்சியாக 02 பேர், மூன்றாவது முயற்சியாக 02 பேர் என மொத்தம் 04 பேரும், பொறியியல் துறைக்கு முதலாவது முயற்சியாக 03 பேரும், மூன்றாவது முயற்சியாக ஒருவரும் என மொத்தம் 04 பேரும், கலைத்துறைக்கு 06 பேரும், பொறியியல் தொழில்நுட்ப துறைக்கு 5 பேரும், முகாமைத்துவம் மற்றும் வர்த்தக துறைக்கு 11 பேரும் மற்றும் பௌதிக விஞ்ஞானப் பிரிவிலும் என மொத்தமாக 55 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்குத் தகுதி பெற்றுள்ளது சாதனைமிக்கது என அதிபர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள், அதன் பெற்றோர்கள், மற்றும் பகுதித் தலைவர், உதவி பகுதித்தலைவர், பிரதி, உதவி அதிபர்கள், வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தவர் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர் கபூர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, கொரோனா சூழ்நிலை களுக்கு மத்தியிலும் சிறப்பாகக் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த மாணவர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment