இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா - 3,915 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா - 3,915 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2ஆவது நாளாகவும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும்.

இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 இலட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றினால் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை (3,980) விட சற்று குறைவாகும். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 76 இலட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தற்போது 36,45,164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 49 இலட்சத்து 73 ஆயிரத்து 58 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment