கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்காக கோலியும், அனுஷ்கா சர்மாகவும் 2 கோடி ரூபா நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்காக கோலியும், அனுஷ்கா சர்மாகவும் 2 கோடி ரூபா நிதியுதவி

கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்க மொத்தம் 7 கோடி இந்திய ரூபா நிதி திரட்டும் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் 2 கோடி ரூபாவை நன்கொடையாக அளித்துள்ளனர்.

விராட் கோலி மற்றும் போலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்தியாவில் கொவிட் நிவாரணத்திற்காக 7 கோடி ரூபாவை திரட்ட இலக்கு வைத்துள்ளனர்.

இந்த முயற்சிக்கு ஒரு பகுதியாக அவர்கள் 2 கோடி ரூபாவை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் விராட் கோலி கூறியிருப்பதாவது, நானும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கொரோனா நிவாரண நிதியான 7 கோடி ரூபாவை திரட்ட முடிவு செய்தோம். இதற்காக கெட்டோ தளத்தில் இருவரும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். அதில் முதல் பங்களிப்பாக இருவரும் 2 கோடி ரூபாவை வழங்கியுள்ளோம்.

இந்தப் பிரச்சாரம் 7 நாட்கள் நடக்கும், அதன்பின் அந்த நிதி ஏ.சி.டி அமைப்புக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒக்சிஜன், மருத்துவ வசதிகள், தடு்பபூசி விழிப்புணர்வு, தொலைபேசி மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

நமது நாட்டின் வரலாற்றில் நாம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத நாட்களை கடந்து வருகிறோம், அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்து, பலரின் உயிரைக் காப்பதுதான் தேசத்துக்கு அவசியம். கடந்த ஆண்டிலிருந்து மக்கள் சந்தித்துவரும் துன்பங்களைப் பார்த்து நானும் அனுஷ்காவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம்.

கொரோனாவுக்கு எதிரானப் போரில் கடந்த ஆண்டிலிருந்து நானும், அனுஷ்காவும் எங்களால் முடிந்த அளவு பலருக்கும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம். இந்தியாவுக்கு இன்னும் அதிகமான ஆதரவு தேவைப்படுகிறது.

மிகுந்த நம்பிக்கையுடன் இந்த நிதிதிரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம், தேவைப்படும் மக்களுக்காக முடிந்தவரை அதிகமான பணத்தை திரட்டமுடியும் என நம்புகிறோம். தேசத்தின் சக மக்களுக்காக மக்கள் முன்வந்து அதிகமான உதவிகளை வழங்குவார்கள் என நம்புகிறோம். நாம் ஒன்றாக இணைந்தால், இந்த பெருந்தொற்றை கடந்து வர முடியும் என்றார்.

அனுஷ்கா சர்மா அந்த அறிக்கையில் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால், நாட்டின் சுகதாார முறையே திணறுவதைப் பார்த்தபோதும், மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதைப் பார்த்தபோதும் எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

விவரிக்க முடியாத அளவுக்கு மக்கள் அனுபவித்த துன்பங்களைப் பார்த்து நானும், எனது கணவரும் ஆழ்ந்த வேதனை அடைந்தோம். நாங்கள் திரட்டும் இந்த நிதி, கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட உதவும் என்றார்.

No comments:

Post a Comment