பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனடா பிரதமர் உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனடா பிரதமர் உத்தரவு

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனடா பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிசு கொலம்பியா இந்த வாரம் 215 குழந்தைகளின் எச்சங்கள் பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து பழங்குடி சமூகத் தலைவர்கள் உட்பட பலரும் கனடா முழுவதும் கொடிகளைக் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர் .

அந்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஜஸ்டின் ட்ரூடோ, தனது டுவிட்டர் பதிவில் இந்த உத்தரவினை அறிவித்தார்.

”கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி எனப்படும் மிகப்பெரிய பழங்குடியின குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடி மக்களுடைய சடலங்கள்தான்” என Tk'emlúps te Secwépemc பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் உறுதிபடுத்தியுள்ளார்.

தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் உடல்களை கண்டுபிடித்த அவர், இன்னும் தளத்தில் தேடல் முடியவில்லை என கூறினார்.

மேலும் கசிமிர், ``கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுள் 6,000 க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர். இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது.

1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும்” என கூறப்படுகிறது. 1990 களில்தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டன.

கனட சட்டமன்ற தலைவர் பெர்ரி பெல்லக்ராட், “பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad